உஷார்.. ’ஆப்’பில் வரும் ஆபத்து..! பெண்கள் மூலம் செல்போனில் பேசி ஆசை காட்டி வழிப்பறி செய்யும் கும்பல்..

0 3326

கிரைண்டர் ஆப் எனும் செல்போன் செயலியில் பெண்கள் மூலம் பேசி ஆண்களை வரவழைத்து வழிப்பறி செய்யும் 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்களது வலையில் விழுந்த கோயம்புத்தூரை சேர்ந்த பிரவீன் என்ற 25 வயது வாலிபர், செல்போனில் அழைத்த பெண் கூறியபடி சூலூர் நாகமநாயக்கன் பாளையத்திற்கு வந்த போது, ஒரு பெண் உள்பட 4 பேர் அவரை வழிமறித்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்துச்சென்றனர்.

இதுதொடர்பாக பிரவீன் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் அந்த பெண்ணையும், மேலும் 3 வாலிபர்களையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments