கேரள மாநிலம் மூணாறு குண்டலை எஸ்டேட் பகுதியில் நள்ளிரவில் நிலச்சரிவு..!
தொடர் கனமழையால் கேரள மாநிலம் மூணாறு அடுத்துள்ள குண்டலை எஸ்டேட் பகுதியில், நள்ளிரவு ஏற்பட்ட நிலச்சரிவில் வாகனங்கள், கடைகள் மண்ணில் புதைந்தன.
நேற்றிரவு மூணாறில் இருந்து குண்டலை வழியாக வாகனத்தில் சென்ற இருவர் நிலச்சரிவு ஏற்படுவதைக் கண்டு அப்பகுதி மக்களுக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து அங்கு வசித்து வந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுமார் 175 குடும்பங்களை சேர்ந்த 450 பேர் வெளியேறி உயிர்தப்பிய நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் மூணாறு ராஜமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு 70 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களுக்கு இரண்டாமாண்டு நினைவஞ்சலி செலுத்த உள்ள நிலையில், மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments