பிங்க் நிறத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்!

0 2939

பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துகளை எளிதில் அடையாளும் காணும் வகையில் இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்பட்ட 50 பேருந்துகளின் சேவையை அமைச்சர்கள் சேகர் பாபு, சிவசங்கர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

சென்னை அண்ணா சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேருந்துகளை துவக்கி வைத்த பிறகு மூவரும் அண்ணா சதுக்கம் முதல் ஓமந்தூரார் வளாகம் வரை பேருந்திலேயே பயணித்தனர்.

இதனிடையே, சென்னையில் பேருந்து நிலையங்களில் இருந்து முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இயக்கப்படும் 10 இணைப்பு சிற்றுந்துகளை அமைச்சர்களுடன் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments