'கோவாக்சின்'-க்கு அங்கீகாரம் அளித்த ஜப்பான் : பாரத் பயோடெக் அறிவிப்பு
நாட்டிற்கு வருகை தரும் பயணிகளுக்கு 'கோவாக்சின்' தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக செலுத்த ஜப்பான் அனுமதி அளித்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயணிகளுக்கு 'கோவாக்சின்' தடுப்பூசியை பூஸ்டர் டோஸ் செலுத்த ஜப்பான் அனுமதி அளித்துள்ளதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம், இது எங்கள் கொரோனா தடுப்பூசியின் செயல்திறனுக்கு கிடைத்த மற்றொரு அங்கீகாரம் என்று குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் கோவாக்சின் தடுப்பூசியை ஜப்பான் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
Comments