ரஷ்யா - துருக்கி அதிபர்கள் இடையே 4 மணி நேரப்பேச்சுவார்த்தை.. எரிவாயு ஏற்றுமதிகளுக்கு ரஷ்ய பணமான ரூபிளில் செலுத்த ஒப்புதல்!
ரஷ்ய அதிபர் புதினும் துருக்கி அதிபர் தாயிப் எர்டோகனும் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து எரிவாயு ஏற்றுமதிகளுக்கு ரஷ்ய பணமான ரூபிளில் செலுத்த ஒப்புதல் ஏற்பட்டது.
உக்ரைன் போரையடுத்து கடும் பொருளாதாரத் தடைகளை சந்தித்து வரும் ரஷ்யா, டாலருக்கு நிகராக ரூபிள் மூலம் பணப்பரிவர்த்தனைகளை செய்ய முயன்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக துருக்கியுடன் எரிவாயு விநியோகத்தில் ரூபிள் பயன்படுத்தப்பட இருதலைவர்களும் பேச்சு நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
Comments