வைகை ஆற்று வெள்ளத்தில் சிறுவர்கள் குளிப்பதை காவல்துறையினர் தடுக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

0 2458

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வழியாக ஆர்பரித்து ஓடும் வைகை ஆற்றில், அரசு பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் நீச்சலடித்து பொழுதுபோக்கினர்.

வைகை அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரால் வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பும் சிறுவர்கள் வைகை ஆற்றில் அச்சமின்றி குளித்து வருகின்றனர்.

கடந்தாண்டு இதே இடத்தில் சூழலில் சிக்கி 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளதால், அது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க காவலர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments