பூண்டி துளசிய்யா வாண்டையார் மீது போலீஸ் மோசடி வழக்கு..! பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு

0 3291

தஞ்சை மாவட்டம் பூண்டியில் உள்ள புஷ்பம் தன்னாட்சி கலை கல்லூரியில் பேராசிரியர்களை நியமித்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி கல்லூரி நிறுவனரான மறைந்த  துளசி வாண்டையார் உள்ளிட்ட 4 பேர் மீது மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் அருகே பூண்டியில் புகழ்பெற்ற வீரைய்யா வாண்டையார் நினைவு ஸ்ரீபுஷ்பம் கலைக் கல்லூரி 1956-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியை மறைந்த முன்னாள் எம்பி துளசிய்யா வாண்டையார் குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.

 இக்கல்லூரியில் 2015 -ம் ஆண்டு முதல் 2017 -ம் ஆண்டு வரை பேராசிரியர் பணிக்காக நடைபெற்ற நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு கிடைத்த தகவலின்படி, காவல் ஆய்வாளர் சசிகலா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் இக்கல்லூரியில் கடந்த 2017-ம் ஆண்டு உதவி பேராசிரியர்கள் பணி நியமனத்தில் இன சுழற்சி முறை பின்பற்றவில்லை என்பது தெரியவந்தது. இதில் உதவி பேராசிரியர்கள் எஸ்.கே.தியாகராஜன், சி.கற்பகசுந்தரி ஆகிய இருவரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதை மறைத்து, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என போலியான சாதிச்சான்றிதழை வழங்கி பணியில் சேர்ந்துள்ளனர்.

இதை உண்மை என சமர்பித்து, அரசை கல்லூரி நிர்வாகம் 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை அவர்களுக்கு ஊதியமாக இதுவரை 55 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது.

எனவே இன சுழற்சி முறையில் பணி நியமனத்துக்கு தேர்வானவர்களின் சாதிச் சான்றித்களின் உண்மை தன்மையை சரிபார்க்காமல் உதவி பேராசிரியர்களாக பணி நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கிய தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி முன்னாள் துணை இயக்குநர் டி.அறிவுடைநம்பி முறைகேட்டில் ஈடுபட்ட உதவிப் பேராசிரியர்கள் எஸ்.கே.தியாகராஜன், சி.கற்பகசுந்தரி, கல்லூரி தாளாளரும் முன்னாள் எம்பியுமான மறைந்த துளசிய்யா வாண்டையார் உள்ளிட்ட 7 பேர் மீது மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments