புரோட்டான் தெரப்பி சிகிச்சையை மாநிலத்தில் ஒரு மருத்துவமனையிலாவது கொண்டு வர வேண்டும்-அமைச்சருக்கு தி.மு.க. எம்.பி. ராஜேஷ் குமார் வலியுறுத்தல்
புற்றுநோய்க்கான அதிநவீன புரோட்டான் தெரப்பி சிகிச்சைமுறையை மாநிலத்தில் ஒரு மருத்துவமனையிலாவது கொண்டு வர நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு தி.மு.க. எம்.பி. ராஜேஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களவையில் பேசிய அவர், கதிரியக்க அடிப்படையிலான புரோடான் தெரபி சிகிச்சை, புற்றுநோய்க்கான மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறை என குறிப்பிட்டுள்ளார்.
ஹரியானாவில் உள்ள தேசிய புற்றுநோய் மையத்தில் அந்த விலையுயர்ந்த சிகிச்சை முறை, பிரதமர் ஜன் ஆரோக்யா திட்டத்தில் இலவசமாக அளிக்கப்படுவதாகவும் ராஜேஷ் குமார் கூறினார்.
Comments