நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய பெண் தாசில்தார்..!

0 2625
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய பெண் தாசில்தார்..!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலாடி முன்னாள் பெண் தாசில்தார் லலிதா, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால், அவரை இன்று மாலை வரை நீதிமன்றத்திலேயே இருக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கடலாடி கிராமத்தில் பொது பாதை ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பெண் தாசில்தார் லலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

அப்போது தனது தவறை ஏற்றுக்கொண்டு அவர் நீதிபதிகளிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். மேலும், ஆக்கிரமிப்பை 3 வாரங்களில் அகற்றுவதாக அரசு தரப்பிலும் உறுதியளிக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments