ரூ.2 கோடி மதிப்பிலான சேதுபதி அரசு குடும்பத்தின் பெண் சிலை மீட்பு

0 3341

இரண்டு கோடி மதிப்பிலான சேதுபதி அரசு குடும்பத்தின் பெண் சிலையை சிலை திருட்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஐம்பொன் சிலையை சாத்தான்குளத்தை சேர்ந்த ஆறுமுகராஜ், குமரவேல் ஆகியோர் விற்க முயற்சிப்பது குறித்து தகவலறிந்த சிலை திருட்டு தடுப்பு பிரிவு, கடத்தல் கும்பலுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் சிலையை மீட்க திட்டமிட்டனர். இதையடுத்து தனிப்படை அமைத்து சிலை வாங்கும் நபர்களை போல் கடத்தல் கும்பலை அணுகியுள்ளனர்.

ஒரு வார தாமதத்துக்கு பிறகு திருச்சி சாலை பிரிவு சந்திப்புக்கு சிலையுடன் வந்த திருச்சி உறையூரை சேர்ந்த இடைத்தரகர் உள்பட 4 பேரை கைது செய்த தனிப்படை அதிகாரிகள், அவர்களிடம் இருந்து சேதுபதி அரசு குடும்பத்தின் பெண் சிலையை மீட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments