பண மோசடி புகார்- இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் என்ற நிதி நிறுவனத்தில் சோதனை

0 2813

பண மோசடி புகாரில், இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் என்ற நிதி நிறுவனத்திற்கு தொடர்புடைய தமிழக முழுவதும் 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வேலூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தை லட்சுமி நாராயணன் ,வேதநாராயணன் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். இந்நிறுவனம் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 8,000 ரூபாய் வட்டி தருவதாகக் கூறி ஆயிரக்கணக்கான மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாயை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக எழுந்த புகாரில் சென்னை கிண்டி தாமரை டெக் பார்க்கில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை நடத்திய அதிகாரிகள், பணப்பரிவர்த்தனை தொடர்பான கணினி, ஹார்ட்டு டிஸ்குகளை பறிமுதல் செய்தனர். இதே போன்று வேலூர், அரக்கோணம், நெமிலி, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்களிலும் உரிமையாளார்களின் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments