மூழ்கிய தரைபாலம் வழியாக செல்ல முயன்று தண்ணீரில் சிக்கிய பேருந்து... கயிறு கட்டி பேருந்தில் இருந்த பயணிகள் மீட்பு!

0 3342

கர்நாடகாவில் வெள்ளத்தில் மூழ்கிய தரைபாலம் மீது செல்ல முயன்ற தனியார் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது.

தும்கூர் மாவட்டத்தில் உள்ள பாவகடா அருகே 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்பகுதியில் இருந்த தரைபாலம் மழை வெள்ளத்தில் மூழ்கி இருந்த நிலையில், ஆபத்தை உணராத பேருந்து ஓட்டுநர் தரைபாலத்தை கடக்க முயன்றார்.

மழைநீர் அதிகமாக சென்றதால் பாலத்தை கடக்க முடியாமல் பாதியிலேயே பேருந்து நின்றது. சம்பவ இடத்திற்கு வந்த உள்ளூர் மக்கள் கயிறு கட்டி பேருந்தில் இருந்த பயணிகளை மீட்டனர்.

ராய்ச்சூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் மூழ்கிய தரைபாலத்தை 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சென்ற பள்ளி பேருந்து கடக்க முயன்றபோது அப்பகுதி மக்கள் பேருந்தை தடுத்தி நிறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments