குரங்கு அம்மையை பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்தது அமெரிக்கா
அமெரிக்காவில் குரங்கு அம்மை நோய்தொற்று பரவுவதால், அந்நாட்டில் பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து அறுநூறை தாண்டி உள்ளது. குரங்கு அம்மைக்கான தடுப்பூசி கிடைக்கும் வேகம் குறித்து பைடன் நிர்வாகம் விமர்சனங்களை எதிர்கொண்டதால் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் இப்போது குரங்கு அம்மையும் உலக அளவில் பரவி வருகிறது. இந்த நோய் அமெரிக்காவில் அதிக அளவில் பரவியிருப்பதால் அந்நாட்டின் மாகாணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அவசர நிலையை அறிவித்து வருகின்றன .
Comments