பார்த்தா சட்டர்ஜி -ஆர்பிகா முகர்ஜியை நேருக்கு நேர் வைத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டம்!

0 2135

ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் கைதான மேற்குவங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி மற்றும் அவருடைய கூட்டாளியான நடிகை ஆர்பிதா முகர்ஜியை நேருக்கு நேர் வைத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.

அப்போது வீடியோவில் இருவரின் முகபாவங்களையும் பதிவு செய்யும் வாய்ப்பு உள்ளது. இன்று நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜரப்படுத்த உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், இவ் வழக்கின் விசாரணையில் முக்கிய ஆவணங்களை சேகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆர்பிதாவின் இரண்டு வீடுகளில் கைப்பற்றப்பட்ட 22 ஆப்பிள் உயர் ரக மொபைல் போன்களில் முக்கியத் தகவல்கள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments