அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனைக்கு 9 ஆண்டுகள் சிறை - ரஷ்ய நீதிமன்றம்

0 3655


போதைப்பொருள் கடத்தியதாக ரஷ்யாவில் கைதுசெய்யப்பட்ட அமெரிக்க நட்சத்திர கூடைப்பந்து வீராங்கனைக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்னி கிரைனர் (Brittney Griner) என்ற அந்த வீராங்கனை கடந்த பிப்ரவரி மாதம் கூடைப்பந்து போட்டியில் பங்கேற்க ரஷ்யா சென்றபோது கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.

ரஷ்யா மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், கிரைனரை பணையக்கைதி போல் வைத்து ரஷ்யா பேரம் பேசக்கூடும் என அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், கிரின்னருக்கு 9 ஆண்டுகள் சிறையும், ஒரு மில்லியன் ரூபிள் அபராதமும் விதித்து ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments