விடுதிக்கு தாமதமாக வந்ததால் கண்டித்த வார்டன்?-கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவிகள் 2 பேர் தற்கொலை முயற்சி
சென்னையில் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவிகள் 2 பேர் வேதிப் பொருளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தது தொடர்பாக விடுதி வார்டன், சக மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
2ஆம் ஆண்டு படித்து வரும் மதுரை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த அம்மாணவிகள் வேப்பேரியில் உள்ள கல்லூரி விடுதியில் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர்.
உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் விசாரணை நடத்திய போலீசார், அவர்கள் கல்லூரி பரிசோதனைக் கூடத்தில் இருந்து மெர்குரி சல்பைட் என்ற வேதிப்பொருளை எடுத்து வந்து விடுதியில் அருந்தியதை கண்டறிந்தனர்.
சில நாட்களுக்கு முன், அம்மாணவிகள் வெளியில் சென்று விடுதிக்கு தாமதமாக வந்ததால் வார்டன்கள் பெற்றோரிடம் புகார் கூறியதை அடுத்து, அவர்கள் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
Comments