பாலியல் தொல்லையால் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு - மேலும் இருவர் கைது

0 5645

கோவையில் கடந்த ஆண்டு நவம்பரில் பாலியல் தொல்லையால் 12ம் வகுப்பு மாணவி  தற்கொலை செய்து கொண்டார்.

இந்த புகாரில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியும்  விவகாரம் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில்,  மாணவி இறப்பதற்கு முன்னால் எழுதிய கடிதத்தில் சிறு வயதில் இருந்தே தனக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக குறிப்பிட்டிருந்ததன் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார்,  மாணவியின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த சுல்தான் என்பவனையும், மாணவியுடன் படித்த மற்றோரு மாணவியின் தந்தை மனோ ராஜையும் தற்போது கைது செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments