யூடியூபர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

0 4138

அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த உயர்நீதிமன்ற கிளை, வழக்கில் அவர் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

யூடியூப் சேனலில் நீதித்துறை பற்றி சவுக்கு சங்கர் விமர்சித்தது குறித்த வழக்கில், தனது தீர்ப்புகள் குறித்து கருத்து தெரிவிக்க சவுக்கு சங்கருக்கு உரிமை உண்டு என்றும் அவரது புண்படுத்தும் கருத்துகள் தமது நேர்மையை கேள்விக்கு ஆளாக்கியதாகவும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கருக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், அவருக்கு மாதம் 43 ஆயிரம் ரூபாய் வீதம் 13 ஆண்டுகளாக 65 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக அரசு தெரிவித்தது. இதற்கு, பணி நீக்கம் செய்யப்பட்டருக்கு இவ்வளவு வழங்கியுள்ளீர்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அவர் மீது ஏற்கனவே அவமதிப்பு வழக்கு உள்ள நிலையில் மீண்டும் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments