காட்டாற்று வெள்ளத்தில் ஆற்றின் நடுவே மகனுடன் சிக்கிய தாய்-கயிறு கட்டி மீட்ட உள்ளூர் மக்கள்

0 3867

ஒடிசாவின் ராய்கட் மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தில் ஆற்றின் நடுவே சிக்கித் தவித்த தாயாரையும், மகனையும் உள்ளூர் மக்கள் கயிறு கட்டி மீட்டனர்.

பஞ்சாபை கிராமத்தில் வசிக்கும் நந்தினி என்ற பெண், தனது மகனுடன் ஆற்றை கடந்து வனப்பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பும்போது ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கினார்.

வெகுநேரமாகியும் இருவரும் வீடு திரும்பாததால் உள்ளூர் மக்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆற்றின் நடுவே சிக்கித் தவித்த தாயும், மகனையும் உள்ளூர் மக்கள் கயிறு கட்டி இழுத்து பத்திரமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments