சென்னையில் உள்ள உணவகத்தில் பீப் ப்ரைட் ரைஸில் புழு... வாடிக்கையாளர் அதிர்ச்சி

0 3893

சென்னையில் உள்ள பர்வீன் ஃபாஸ்ட் ஃபுட் கடையில் சாப்பிட்ட பீப் ப்ரைட் ரைஸில் புழு இருந்ததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மின்ட் மினி தெருவில் ஹசன் என்பவருக்கு சொந்தமான பர்வீன் ஃபாஸ்ட் ஃபுட் கடைக்கு நண்பர்களுடன் வந்த Mohamed Feroz என்பவர் பீப் ப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது உணவில் புழு இருந்ததை பார்த்துள்ளார்.

கடை ஊழியர்களிடம் கேட்டதற்கு அவர்கள் அலட்சியமாக பதிலளித்ததால், ஏழுகிணறு காவல் நிலையத்தில் Mohamed Feroz புகார் அளித்ததையடுத்து கடையை மூட போலீசார் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments