கடற்படை காவல்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்ததாக கேப்டன் சமீர் சிங் மீது வழக்குப் பதிவு

0 3069

கடற்படை காவல்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரை ஏமாற்றி பணம் மோசடி செய்ததாக கேப்டன் சமீர் சிங் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் போலி கடிதத்தைக் காட்டி இளைஞர்களுக்கு செக்யூரிட்டி காவலர் வேலை வாங்கித் தருவதாக பணம் பறித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.பணி நியமனத் தேர்வு மும்பை கொலாபா வில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படைக் கப்பலான குஞ்சலியில் நேர்முகத்தேர்வு நடத்தப்படும் என்றும் அந்த போலி நபர் அறிவித்திருந்தார்.

இதற்கான நுழைவுக் கட்டணம், சீருடை கட்டணம், ஐடி கார்டு கட்டணம் என பலவகைகளில் பணம் பறிக்கப்பட்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments