காமன்வெல்த் போட்டியில் மேலும் ஒரு வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை சேர்த்தது இந்தியா

0 4022

பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளின் ஆறாம் நாள் ஆட்டத்தில் இந்தியா ஒரு வெள்ளிப்பதக்கம் மற்றும் 4 வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளது. பெண்களுக்கான 78 கிலோ ஜூடோ போட்டியில் இந்திய வீராங்கனை துலிகா மான் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.

ஸ்குவாஷ் விளையாட்டில் இந்தியாவிற்கான முதல் பதக்கத்தை சவுரவ் கோசல் பெற்று தந்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்தில் ஜேம்ஸ் வில்ஸ்ட்ரோவை 3 க்கு 0 என்ற கணக்கில் வீழ்த்தி அவர் வெண்கலம் வென்றார்.

பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர்கள் குர்தீப் சிங் மற்றும் லவ்ப்ரீத் சிங் ((Lovepreet Singh)) தலா ஒரு வெண்கலப்பதக்கத்தை வென்றனர். உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் ஷங்கர் வெண்கலம் வென்றார். 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களுடன் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments