பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு

0 6742
ஸ்ரீரங்கம் கோவில் அருகே உள்ள பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் கோவில் அருகே உள்ள பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

கடந்த 1-ம் தேதி மதுரவாயலில் நடைபெற்ற கூட்டத்தில் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல்கண்ணன், ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் என பேசினார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அளித்த புகாரில் கனல்கண்ணன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments