சிலந்தியை கொல்ல முயன்று ஒரு காட்டையே அழித்த இளைஞர்..
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் லைட்டர் மூலம் சிலந்தியை கொல்ல முயன்று பெரும் காட்டுத் தீயை மூட்டி அபாயகரமான செயலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டிராப்பர் (Draper) பகுதியை சேர்ந்த கோரி மார்ட்டின் ஆலன், சமீபத்தில் ஸ்ப்ரிங்க்வில்லி (Springville) பகுதிக்கு சென்றிருந்திருந்தார்.
அப்போது சிலந்தி ஒன்றை பார்த்த அவர் அதனை கொல்ல நினைத்து, அதனை லைட்டர் மூலம் தீப்பற்ற வைக்க முயற்சித்திருக்கிறார்.
பலத்த காற்றின் காரணமாக தீ மற்ற இடங்களுக்கும் பரவி சுமார் 60 ஏக்கர் மலைப்பகுதிகளை நாசம் செய்தது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர் மூலமாக கட்டுப்படுத்தினர்.
Comments