மதுரையில் ஆடிப்பெருக்கையொட்டி கோலாகலமாக கொண்டாடப்பட்ட தாய்மாமன் திருவிழா..!
மதுரை மாவட்டத்தில் ஆடிப்பெருக்கையொட்டி தாய்மாமன் திருவிழா கொண்டாடப்பட்டது.
உசிலம்பட்டி அடுத்த கருமாத்தூர் கருப்பசாமி கோவிலில் தாய் மாமன் தின விழாவையொட்டி, கையில் வேள்கம்பு மற்றும் விதை நெல்லுடன் ஊர்வலமாக வந்த தாய் மாமன்களுக்கு பரிவட்டம் கட்டப்பட்டது.
அதன் பின் பொங்கல் வைத்து தாய்மாமன் மடியில் அமர்ந்து குழந்தைகளுக்கு காது குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆடிப்பெருக்கு நாளில் மாமன் கையால் விதை நெல் வாங்கினால் வம்சம் விருத்தியாகி உறவின்முறை நீடித்திருக்கும் என ஐதீகமாக கருதப்படுவதாக கூறப்படுகிறது.
Comments