தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களை தடுப்பது தொடர்பாக உயர்மட்ட குழு அமைக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்!
தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் இலவச திட்டங்கள் வெளியிடுவதை தடுப்பது தொடர்பாக ஆராய உயர்மட்டக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இலவச திட்டங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய கோரி தொடரப்பட்டுள்ள பொதுநல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒட்டுமொத்த மக்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் விவகாரம் இது என்று குறிப்பிட்டுள்ளது.
இலவச திட்டங்களை தடுப்பது தொடர்பாக, ரிசர்வ் வங்கி, மத்திய நிதி ஆணையம், நிதி ஆயோக், ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களை கொண்ட குழு ஒன்றை அமைக்கவேண்டும் என்றும், குழு அமைப்பது தொடர்பான பரிந்துரைகளை 7 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என்று கூறி வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
Comments