200 கோடி டாலர் கடன் வேண்டும்..! உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் வங்கதேச அரசு கோரிக்கை
தலா 100 கோடி டாலர் கடன் வழங்குமாறு உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் வங்கதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கும் முயற்சியாக கடன் உதவி கோரப்பட்டுள்ளது. ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக எரிபொருள் மற்றும் உணவுப்பொருட்கள் விலை அதிகரித்துள்ளதால் வங்கதேசத்தில் இறக்குமதி செலவும் உயர்ந்து நடப்பு கணக்கில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
Comments