டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி.!
டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாஅதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், நாட்டின் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் வசிக்கும் நைஜீரியாவை சேர்ந்த நபருக்கு தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, நிலைமையை கட்டுப்படுத்த அங்குள்ள 6 மருத்துவமனைகளில் மொத்தம் 70 தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, குரங்கம்மை நோய் பரவல் மற்றும் பாதிப்புகளை கண்காணிக்கவும், நோய் கண்டறிதல் தொடர்பான வழிகாட்டுதலை வழங்கவும் ஒரு பணிக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
Comments