செஸ் ஒலிம்பியாட் 5வது சுற்று ஆட்டம் ; உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி

0 1972
செஸ் ஒலிம்பியாட் 5வது சுற்று ஆட்டம் ; உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 5ஆவது சுற்று ஆட்டத்தில், நார்வேயை சேர்ந்த உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன், ஜாம்பியா அணி வீரரை வீழ்த்தினார்.

முன்னதாக, இந்திய ஓபன் 'பி' பிரிவு வீரர்கள் விளையாடும் போட்டிகளை கார்ல்சன் சிறிது நேரம் கவனித்துச் சென்றார்.

இந்திய அணி ஸ்பெயினுடன் விளையாடிய போட்டிகளும், கார்ல்சன் விளையாடிய போட்டியும் ஒரே அரங்கத்தில் நடைபெற்ற நிலையில், அவர் தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று தமிழக வீரர்கள் பிரக்ஞானந்தா, குகேஷ் விளையாடிய ஆட்டத்தை பார்த்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments