வங்கிக்கடன் மோசடி செய்ததாக சுரானா குழும நிறுவனத்திற்கு சொந்தமான 75 சொத்துக்கள் முடக்கம்
சென்னையை சேர்ந்த சுரானா குழும நிறுவனங்களுக்கு சொந்தமான 67 காற்றாலைகள் உட்பட 113 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 75 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
3986 கோடி ரூபாய் வங்கிக்கடன் மோசடி செய்ததாக சுரானா நிறுவனங்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சட்டவிரோத பணபரிமாற்றம் செய்ததாக அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் உள்பட 4 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
இந்நிலையில், சுரானா நிறுவனங்களுக்கு சொந்தமான 75 சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
Comments