அடுத்த 12 நாட்களுக்கு ஒரு லட்சம் பள்ளி மாணவர்கள் சூப்பர் குட்டி போலீசாக செயல்படுவார்கள் - காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க அடுத்த 12 நாட்களுக்கு ஒரு லட்சம் பள்ளி மாணவர்கள் சூப்பர் குட்டி போலீசாக செயல்படுவார்கள் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
7 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறு வயது முதலே போக்குவரத்து விதிகள் குறித்து பயிற்சி அளிக்கும் வகையில், போக்குவரத்து பாதுகாவலர்கள் அமைப்பு மற்றும் பள்ளிகளில் செயல்படும் "சாலை பாதுகாப்பு ரோந்து படை"ஆகிய அமைப்புகளுடன் இணைந்து "சூப்பர் குட்டி போலீஸ்" திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன் படி, மாணவர்கள் தாங்கள் பயணிக்கும் வாகனங்களில் வாகன ஓட்டி ஹெல்மெட் அணிந்துள்ளாரா? கார் ஓட்டுபவர் சீட் பெல்ட் அணிந்துள்ளாரா? என்பதை கண்காணித்து தங்களுக்கு கொடுக்கப்படும் அட்டையில் குறிப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Comments