சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை ; கேண்டீன் ஜூஸ் மாஸ்டர் கைது

0 1949
சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை ; கேண்டீன் ஜூஸ் மாஸ்டர் கைது

சென்னை ஐஐடி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கேண்டீன் ஜூஸ் மாஸ்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜூலை 24 நள்ளிரவு விடுதிக்கு சைக்கிளில் சென்ற மாணவிக்கு மர்ம நபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், வளாகத்தில் பணிபுரியும் 300க்கும் மேற்பட்டோரின் புகைப்படங்களை மாணவியிடம் காண்பித்து போலீசார் விசாரித்தனர்.

ஆனால், சம்பவம் நடந்த நேரம் இருள் சூழ்ந்திருந்ததால் மாணவியால் அந்த நபரை அடையாளம் காட்ட முடியவில்லை. இந்நிலையில், அன்றைய தினம் நள்ளிரவு கேண்டீனில் இருந்த பீகாரைச் சேர்ந்த சந்தன் குமார் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் குற்றம் உறுதியானதால் சந்தன் குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவனை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments