செஸ் விளையாட வந்த இடத்தில் பல்லாங்குழி விளையாடி மகிழ்ந்த பூட்டான் வீராங்கனைகள்..!
மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது செஸ் விளையாட வந்த பூட்டான் வீராங்கனைகள் பல்லாங்குழி விளையாடி மகிழ்ந்தனர்.
மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு போட்டி நேரத்தை தாண்டி பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஆடு புலி ஆட்டம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளை விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் பொழுதுபோக்கிற்காக வெளிநாட்டு வீரர்கள் தமிழக பாரம்பரிய விளையாட்டு பற்றி தெரிந்து கொண்டு விளையாடியும் மகிழ்கின்றனர்.
Comments