போலி நகைகளை வைத்து ரூ.69 லட்சம் மோசடி.. தனியார் நகை கடன் வங்கி மேலாளர், விற்பனை பிரதிநிதி கைது..!

0 1650
போலி நகைகளை வைத்து ரூ.69 லட்சம் மோசடி.. தனியார் நகை கடன் வங்கி மேலாளர், விற்பனை பிரதிநிதி கைது..!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் போலி நகைகளை வைத்து 69 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தனியார் நகை கடன் வங்கி மேலாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பேருந்துநிலையம் அருகே செயல்பட்டு வரும் கேரளாவை சேர்ந்த தனியார் நகை கடன் வங்கியில், தியாகராஜ நகரை சேர்ந்த திருநாவுக்கரவு என்பவர் மேலாளராகவும், அவரது மைத்துனர் செந்தில் ஆறுமுகம் விற்பனை பிரதிநிதியாகவும் பணியாற்றி வந்துள்ளனர்.

வருடாந்திர ஆய்வுக்காக அதன் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த அதிகாரிகள் வங்கி லாக்கரில் இருந்த நகைகளை ஆய்வு செய்ததில், 69 லட்சம் ரூபாய்க்கு போலி நகைகளை வைத்து மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்தது.

அவர்கள் அளித்த புகாரின் பேரில் மோசடியில் ஈடுபட்ட மேலாளர் திருநாவுக்கரசு மற்றும் அவரது மைத்துனர் செந்தில் ஆறுமுகத்தை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments