டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி.!

0 1085

டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது.

டெல்லியில் வசிக்கும் நைஜீரியாவை சேர்ந்த 35 வயதான நபருக்கு தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. நோய் தொற்று கண்டறியப்பட்ட நபர் வெளிநாடுகளுக்கு ஏதும் செல்லாத நிலையில், அந்நபர் டெல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் ரத்த மாதிரி புனேவில் உள்ள ஆய்வுக் கூடத்திற்கு சோதனைக்கு அனுப்பப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளளார். மேலும், குரங்கு அம்மை அறிகுறியுடன் மேலும் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments