வருகைப் பதிவில் முறைகேடு செய்த மருத்துவர்.. இடைநீக்கம் செய்த அமைச்சர் மா.சு..

0 1473

கோவை மாவட்ட அரசு மருத்துவமனையில் இதயவியல் துறை மருத்துவர் முனுசாமி மருத்துவமனைக்கு வராமலேயே, வருகைப் பதிவேட்டில் வந்ததாகப் பதிவு செய்வது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரைப் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட முனுசாமி மீது துறைரீதியான விசாரணை நடத்தி மேலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments