வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க தி.மு.க. எதிர்ப்பு - அ.தி.மு.க. ஆதரவு..

0 5006
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்றார். அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமனும், ஓ.பி.எஸ். ஆதரவாளர் கோவை செல்வராஜும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் கூட்டத்திற்கு வரும் முன், கோவை செல்வராஜ் அமர்ந்த நிலையில், அ.தி.மு.க. பெயர் பலகையை தங்கள் பக்கம் ஜெயக்குமார் நகர்த்தி வைத்தார்.

கூட்டத்திற்கு பின் பேட்டியளித்த ஜெயக்குமார், கோவை செல்வராஜ் எந்த கட்சியின் சார்பில் பங்கேற்றார் என்பது தங்களுக்கு தெரியாது என்றார். வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அ.தி.மு.க. ஆதரவளித்தது.

இதனிடையே, அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து இந்திய தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments