கணியாமூர் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமின் வழங்கக்கூடாது” என மாணவியின் தாய் தரப்பில் மனு
கள்ளக்குறிச்சி கணியாமூர் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமின் வழங்க கூடாது என உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் தரப்பில் விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளித் தாளாளர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஐவரும் ஜாமின் கோரி கடந்த 28ஆம் தேதி மனுத்தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இன்று அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு முன், மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டதால், அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து, ஜாமீன் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
Comments