தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 1083

தமிழகத்தில் 6 பேரின் ரத்த மாதிரிகளைப் புனே வைரஸ் ஆய்வகத்தில் சோதித்ததில் யாருக்கும் குரங்கம்மை நோய்ப் பாதிப்பு இல்லை எனத் தெரிய வந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகம், கர்நாடகம், ஆந்திரத்தின் 15 மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவர்களுக்கான பயிலரங்கத்தைச் சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் குரங்கம்மை நோய் அறிகுறியுள்ளோரின் ரத்த மாதிரிகளைச் சென்னை கிண்டி கிங்ஸ் ஆய்வகத்திலேயே பரிசோதிக்கலாம் எனத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments