இயந்திரக் கோளாறால் நடுக்கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள்.. உணவளித்து, உதவிய இலங்கை கடற்படை..!

0 1869
இயந்திரக் கோளாறால் நடுக்கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள்.. உணவளித்து, உதவிய இலங்கை கடற்படை..!

தலைமன்னார் அருகே படகு எஞ்சினில் ஏற்பட்ட கோளாறால்  நடுக்கடலில் தத்தளித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை மீட்ட இலங்கை கடற்படையினர், அவர்களுக்கு உணவளித்து கரை திரும்பி வர உதவி செய்தனர்.

படகு என்ஜின் கோளாறை சரிசெய்ய முடியாததால், படகின் உரிமையாளருக்கு தகவல் அளித்த இலங்கை கடற்படையினர், சர்வதேச எல்லையில்  படகையும், மீனவர்களையும் பத்திரமாக மற்றொரு படகில் வந்த தமிழக மீனவர்களிடம் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments