அலைகளின் வேகத்தில் அடித்து வரப்பட்டு கரையில் குவிந்த மீன்களை கூடையில் அள்ளிச் சென்ற மக்கள்!
கேரள மாநிலம் மலப்புரம் திரூர் கடற்கரையில் அலைகளின் வேகத்தில் அடித்து வரப்பட்டு கரையில் குவிந்த மீன்களை பொதுமக்கள் அள்ளிச் சென்ற வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை மதிய வேளையில் கடல் அலையுடன் சேர்ந்து அதிகப்படியான மீன்கள் கரை ஒதுங்கின.
மீன்கள் துள்ளி குதிப்பதை கண்ட அந்த பகுதியை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து அவைகளை பிடித்து கூடைகளில் அள்ளி போட்டு சென்றனர்.
Comments