விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நள்ளிரவில் அமலாக்கத்துறையினரால் கைது!

0 1617

சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சஞ்சய் ராவத், நள்ளிரவில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பத்ராசால் நில மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று சஞ்சய் ராவத் இல்லத்தில் சுமார் 9 மணி நேரம் சோதனை நடத்திய அதிகாரிகள், கணக்கில் வராத 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கைப்பற்றியதாக கூறப்பட்ட நிலையில், சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் அவரை கைது செய்தனர்.

இன்று காலை 11.30 மணியளவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments