புகழ்பெற்ற எல்லோரா குகைகளில் விரைவில் ஹைட்ராலிக் லிப்ட் வசதி - தொல்லியல்துறை
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான எல்லோரா குகைகள், ஹைட்ராலிக் லிப்ட் வசதி கொண்ட நாட்டின் முதல் நினைவுச்சின்னம் என்ற சிறப்பைப் பெற உள்ளதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள அந்த பாரம்பர்ய தளத்தில் மிகப் பழமையான இந்து, புத்தம் மற்றும் ஜைன மத அடையாளங்களும், சிலைகளும், கற்கோவில்களும் அமைந்துள்ளன.
அங்குள்ள கைலாஷ் என்ற குகை, 2 மாடிகள் கொண்ட கட்டமைப்பு என்பதால் சுற்றுலாப் பயணிகள் படிகளை பயன்படுத்தி செல்கின்றனர். இந்நிலையில், சக்கர நாற்காலியில் செல்வோர் குகையின் முதல் தளத்தை அடைய லிப்ட் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
Comments