அட்வென்ட், கார்லைல் ஆகியன இந்தியாவின் எஸ் வங்கியில் 8900 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகத் தகவல்
உலகளாவிய முதலீட்டு நிறுவனங்களான அட்வென்ட், கார்லைல் ஆகியன இந்தியாவின் எஸ் வங்கியில் 8900 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த இரு நிறுவனங்களும் தலா பத்து விழுக்காடு பங்குகளை வாங்க உள்ளதாகப் பங்குச்சந்தையில் எஸ் வங்கி அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள எஸ் வங்கியின் வாராக்கடன்களைத் திரும்பப் பெறும் உரிமையைத் தனியார் நிறுவனத்துக்கு விற்கத் திட்டமிட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எஸ் வங்கி 310 கோடியே 63 இலட்ச ரூபாய் நிகர இலாபம் ஈட்டியுள்ளது.
Comments