வீடுதோறும் தேசியக் கொடி ஏற்றுவோம்.! பிரதமர் மோடி வேண்டுகோள்.!

0 2460
வீடுதோறும் தேசியக் கொடி ஏற்றுவோம்.! பிரதமர் மோடி வேண்டுகோள்.!

நாட்டு விடுதலையின் 75ஆம் ஆண்டு விழாவையொட்டி வீடுதோறும் தேசியக் கொடியேற்ற வேண்டும் என்றும், விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடைய ரயில் நிலையங்களுக்குச் சென்று பார்க்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

மனத்தின் குரல் என்னும் தலைப்பில் வானொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டு விடுதலையின் 75ஆம் ஆண்டு விழாவையொட்டி ஆகஸ்டு 13, 14, 15 ஆகிய நாட்களில் வீடுதோறும் தேசியக் கொடியேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தேசியக்கொடியை வடிவமைத்த பிங்கிலி வெங்கையாவின் பிறந்த நாள் ஆகஸ்டு இரண்டாம் நாள் என்பதால் அன்று முதல் ஆகஸ்டு 15 வரை நாட்டு மக்கள் அனைவரும் சமூக வலைத்தளத்தில் தேசியக் கொடிப் படத்தை வைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி ரயில் நிலையத்தில் பிரிட்டிஷ் ஆட்சியர் ஆஷ் துரையை விடுதலைப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்றதையும், அந்த நிலையத்துக்கு வாஞ்சிநாதன் பெயர் சூட்டப்பட்டுள்ளதையும் நினைவுகூர்ந்தார்.

இதுபோன்று 24 மாநிலங்களில் விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடைய 75 ரயில் நிலையங்கள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மாணவர்களை அந்த ரயில் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று விடுதலைப் போராட்டத்துடன் அதற்குள்ள தொடர்பை எடுத்துக்கூற வேண்டும் என ஆசிரியர்களைக் கேட்டுக்கொண்டார். உலக நாடுகளில் இந்திய மருத்துவம் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். 

உள்நாட்டில் பொம்மை தயாரிப்பை ஊக்கப்படுத்தியதால் இப்போது இறக்குமதி 70 விழுக்காடு குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments