ஓடுறார் புடி.. புடி.. புடி.. போலீஸை விரட்டிய பெண்கள்.. எல்லாம் வீணாகி போச்சு..!
கோட்டாச்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்கும் திட்டத்துடன் ஆம்னி காரில் கொண்டு வரப்பட்ட மண்ணெணெய் கேன்களை தனிப்பிரிவு காவலர் தூக்கிக் கொண்டு ஓடியதால் அவரை பெண்கள் துரத்திச்சென்றனர்.....
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தங்களது விவசாய நிலம் வழியாக தனியார் நிறுவனத்தின் டவர் மூலமாக மின்சார வயர்கள் கொண்டு செல்ல முயற்சி நடந்து வருவதாகவும், அதனை எதிர்த்த தங்களை ரௌடிகளை வைத்து மிரட்டுவதாக கூறி அந்த நிலத்தின் உரிமையாளர்கள் மகேஸ்வரி, கவிதா மற்றும் அவரது உறவினர்கள் பாலாஜியம்மாள், பீமாராஜ் ஆகிய 4 பேரும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி தீக்குளிக்க மண்ணெணெய் கேன் கொண்டு வந்து இருந்தனர்.
அந்த கேன்களை தனிப்பிரிவு காவலர் அருண் என்பவர் எடுத்துக் கொண்டு ஓட, அவரை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் துரத்திச்சென்றனர்
காவலர் அருண் கேனில் இருந்த மண்ணெண்ணையை தரையில் ஊற்றிச்சென்றதால் துரத்திச்சென்ற பெண்கள் எல்லாம் வீணப்போச்சி என்று அவரிடம் மல்லுக்கு நின்றனர்
அவரோ உங்கள் பிரச்சினையை சொல்லுங்க., தீர்த்து வைப்பாங்க அதற்கு எதற்கு தற்கொலை முயற்சி எல்லாம் என்று அறிவுரை கூறி அங்கிருந்து சென்றார்.
வழக்கமாக அரசு அலுவலகம் முன்பு எவராவது தீக்குளித்தால் முதலில் பந்தாடப்படுவது உளவுபிரிவு போலீசார் தான்..! உயிரிழப்புகள் ஏற்பட்டால் பணியிடை நீக்கம், விசாரணை என அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது.. அதற்காகவே உளவு பிரிவு போலீசார் மிகுந்த முன் எச்சரிக்கையுடன் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.....
Comments