உலகின் மிகப்பெரிய கட்டடம் கட்ட சவூதி அரேபியா திட்டம்.!

0 8398

சவூதி அரேபிய அரசு 75 மைல் நீளத்துக்கு இருபுறங்களிலும் 1600 அடி உயரமுள்ள வானளாவிய கட்டடங்களைக் கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளது.

பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அறிவுறுத்தலின்படி வானளாவிய கட்டடங்களை உருவாக்க வடிவமைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மிரர் லைன் எனப் பெயரிட்டுள்ள இந்தத் திட்டம் கட்டி முடிக்கப்பட்டால் உலகின் மிகப்பெரிய கட்டுமானமாக இருக்கும். இந்தத் திட்டத்துக்கு ஒரு இலட்சம் கோடி டாலர் செலவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் தெரிவித்துள்ளது.

கட்டடங்களின் அடியில் அதிவிரைவு ரயில் இயக்குவதும், நிலத்தில் இருந்து ஆயிரம் அடி உயரத்தில் ஒரு விளையாட்டரங்கம் கட்டுவதும் இந்தத் திட்டத்தில் அடங்கும் எனக் குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments