ஓசூர் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தையால் பொதுமக்கள் அச்சம்.. சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடந்த 29ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று பைரப்பனஹள்ளி கிராமத்திற்குள் புகுந்துள்ளது.
அந்த சிறுத்தை பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்த பின்னர் அங்குள்ள ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது ஏறி குதித்து நீண்ட நேரத்துக்கு பின் அங்கிருந்து திரும்பவும் வந்த வழியாக திரும்பி சென்றது.
இந்த காட்சிகள் யாவும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.
இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Comments