அமெரிக்காவில் 700க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்.!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் துப்பாக்கி வாங்கும் நிகழ்ச்சியில், 700க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள் அதற்கான இழப்பீட்டை பெற்றுக்கொண்டனர்.
ஹூஸ்டன் நகரில் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு கார்களில் காத்திருந்த மக்களிடம் இருந்து துப்பாக்கிகளை பெற்ற போலீசார் செயல்படாத துப்பாக்கிகளுக்கு 50 டாலர் வழங்கினர்.
மேலும், துப்பாக்கிகளின் வகைகளை பொறுத்து 100 முதல் 200 டாலர் வரை மதிப்புள்ள விசா பரிசு அட்டைகளையும் வழங்கினர்.
Comments