செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2ஆம் நாளிலும் இந்திய அணி அபாரம்.!

0 3196

மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2ஆவது நாளிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். 

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2ஆம் நாளில் இந்திய அணியின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஏ,பி,சி என பிரிந்து களம் இறங்கினர்.

பி பிரிவில் விளையாடிய தமிழக வீரர்களான பிரக்ஞானந்தா, அதிபன் பாஸ்கரன் மற்றும் குகேஷ் ஆகியோர் தங்களை எதிர்த்து விளையாடிய எஸ்டோனிய நாட்டைச் சேர்ந்த சுக்காவின் கிரில், வொலோடின் அலெக்சாண்டர், கீக் ஆகியோரை வென்று தலா ஒரு புள்ளிகளை பெற்றனர்.

சி பிரிவில் விளையாடிய தமிழக வீரரான கார்த்திகேயன் முரளி, மெக்சிகோ வீரரான கேபோ விடலை வீழ்த்தினார். அதேபோல், ஏ பிரிவில் விளையாடிய இந்திய வீரர்களான ஹரிகிருஷ்ண பென்ட்லா, நாராயணன் ஆகியோர் மால்டோவா வீரர்களான இவான் மற்றும் ஹமிடெவிசியை தோற்கடித்தனர். மேலும், அப்பிரிவில் விளையாடிய அர்ஜுன் போட்டியை டிரா செய்தார்.

மகளிருக்கான போட்டியில் இந்திய அணியின் ஏ பிரிவில் விளையாடிய தானியா சச்தேவ், குல்கர்னி ஆகியோர் அர்ஜெண்டினாவின் அனபோலா மற்றும் மரியா பெலெனை வீழ்த்தி தலா ஒரு புள்ளிகளை பெற்றனர். அதே பிரிவில் இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி விளையாடிய போட்டி டிராவில் முடிந்தது.

பி பிரிவில் லாட்வியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீராங்கனை கோமேஸ் மேர் ஆன் வெற்றிப்பெற்ற நிலையில், அதே பிரிவில் பத்மினி விளையாடிய போட்டி டிராவானது. மேலும், சி பிரிவில், இந்திய வீராங்கனைகள் நந்திதா, ஈஷா ஆகியோர் சிங்கப்பூர் வீராங்கனைகள் மெய்-என் எமானுவெல் மற்றும் கேகேய்வை தோற்கடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments